TV

6807407510_87e96e8176_b

வெல்லிங்டன், 03.02.19:

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. தொடர்ந்து 4 போட்டியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் 92 ரன்களில் ஆட்டமிழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனைத்தொடர்ந்து 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஆரம்பமே அதிா்ச்சி:

தொடா்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 2 ரன்களிலும், ஷிகர் தவான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனை தொடா்ந்து களமிறங்கிய சுப்மான் கில் 7 ரன்களிலும், டோனி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 18 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி முக்கிய 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

காப்பாற்றிய ஜோடி:

இதனைத்தொடர்ந்து ராயுடுடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் இந்திய அணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஒருமுனையில் ராயுடு நிதானமாக ஆடினாலும், மறுமுனையில் விஜய் சங்கர் அனுபவ வீரரின் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் 5 வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய விஜய் சங்கர் 45 (64) ரன்களில் துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

ராயுடு – ஜாதவ் ஜோடி:

இதனைத்தொடா்ந்து களமிறங்கிய ஜாதவ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் சதத்தை நெருங்கிய ராயுடு 90 ரன்கள் எடுத்த நிலையில், சிக்சர் அடிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ராயுடு ஜாதவ் ஜோடி 6 வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது.

கலக்கிய ஹர்திக்:

இதனைத்தொடர்ந்து ஹார்திக் பாண்டியா களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 203 ரன்களை கடந்த போது, 34 ரன்கள் எடுத்த ஜாதவ் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து புவனேஷ்வர் களமிறங்கிய நிலையில், ஹார்திக் பாண்டியா தனது ருத்ரதாண்டவத்தை தொடங்கினார்.

ஆட்டத்தின் 47 வது ஓவரை ஆஸ்டல் வீசிய நிலையில், அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடுத்த ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் ரன்களை உயர்த்தினார். தொடர்ந்து அதிராடியாக ஆடிய ஹார்திக் அரைசதத்தை நெருங்கிய நிலையில், 45 (22) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரி, 5 சிக்கரும் அடங்கும்.

தொடர்ந்து புவனேஷ்வர் 6 ரன்களிலும், ஷமி 1 ரன்னிலும் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ஹார்னி 4 விக்கெட்டுகளும், போல்ட் 3 விக்கெட்டுகளும், நீஷிம் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply