TV

6807407510_87e96e8176_b

கண்ணூர், 02.02.19:

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்முதாசன். இவருடைய பெற்றோருக்கு 14 குழந்தைகள். இதில் 8 பேர் இறந்து விட்ட நிலையில் தற்போது, 6 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். அம்மு என்ற பெண் குழந்தை இறந்த பிறகு தாசன் பிறந்ததால், இறந்த பெண்ணின் பெயரையும் சேர்த்து அவருக்கு அம்முதாசன் என்று பெயர் சூட்டினர் பெற்றோர்.

அம்முதாசன், இளவயதிலேயே கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருக்கூத்து போன்றவற்றை நடத்தி வந்தார். இதற்காக வெளியூர் சென்றபோது, அம்மினி என்ற பெண்ணைச் சந்தித்தார். இருவரும் காதல் வசப்பட்டனர். இதையடுத்து அம்முதாசன், குடும்பத்தை பிரிந்து அம்மினியை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு, சினிமாவில் நடிக்க சென்னை சென்றவர், கோடம்பாக்கத்தில் தங்கியிருந்து சினிமா வாய்ப்புகளுக்காக அலைந்தார். ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் போதிய வருமானம் இல்லாததால் மீண்டும் கேரளா திரும்பிய அம்முதாசன், நெடும்பாசேரியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

அம்முதாசனின் மருமகன் ஒருவர் சமீபத்தில் மலையாள தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அப்போது, மாமா அம்முதாசனையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கு, அம்முதாசனிடம் நிகழ்ச்சியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், தன்னுடய திருமணம், 50 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தை பிரிந்து சென்றது உட்பட பல்வேறு விஷயங்களைப் பேசினார்.

நேரலையாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை கண்ணூரில் உள்ள சிலர் பார்த்தனர். அவர்களுக்கு, அந்த நபர் அம்முதாசன் என தெரிய வந்தது. இந்த தகவலை, கண்ணூரில் வசித்த அம்முதாசனின் இளைய சகோதரர் பாலகிருஷ்ணனிடம் அவர்கள் தெரிவித்தனர்.

உடனே பாலகிருஷ்ணன், தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசினார். அவர்கள், அம்முதாசன் – பாலகிருஷ்ணனின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, 50 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த இரு சகோதரர்களும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, மகிழ்ச்சி மிகுதியில் கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.