TV

6807407510_87e96e8176_b

மணிப்பூர், 04.02.19:

மணிப்பூர் மாநில திரைப்பட இயக்குனரான அரிபம் ஷ்யாம் சர்மா, தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

பழம்பெரும் இயக்குனரான அரிபம் ஷ்யாம் சர்மாவுக்கு, கடந்த 2006 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் மக்களின் கவலைகளை கருத்தில் கொள்ளாத அரசு கொடுத்த விருதை வைத்துக் கொள்வது தார்மீக அடிப்படையில் தவறு என அரிபம் ஷ்யாம் சர்மா கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.