TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 05.02.19:

கடந்த 1 ம் தேதியன்று மத்தியில் அரசான பாரதிய ஜனதா கட்சி பட்ஜெட் தாக்கல் செய்தது. அந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் அளித்திருந்த நிலையில்., விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டமும் இடம்பெற்றிருந்தது.

அதன் மூலமாக சுமார் 2 ஹெக்டேருக்கு குறைவான அளவில் நிலம் வைத்திருக்கும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவியானது வழங்கப்படும் எனவும், இதன் மூலமாக சுமார் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த ரூ.6 ஆயிரம் மூன்று தவணையாக வங்கிகளில் செலுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசின் விவசாயிகள் அமைச்சகம், அந்தந்த மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் அவர்கள கூறியதாவது:

விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியானது டிசம்பர் 2018 முதல் மார்ச் மாதம் 2019 வரை முதல் தவணையாக வழங்கப்படும். முதல் முறை பெரும் தவணைக்கு ஆதார் எண் அவசியம் இல்லை., அதற்கு பதிலாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்களர் அடையாள அட்டை அல்லது மத்திய அரசின் அடையாள அட்டையின் மூலம் பெறலாம்.

இரண்டாம் தவணை பெரும் சமயத்தில் ஆதார் எண், பயனாளரின் பெயர், நிலத்தின் அளவு மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிவையை இருக்க வேண்டும், இந்த தகவல்கள் அனைத்தையும் பெறுவது மாநில அரசின் கடமை ஆகும். இந்த செயல் திட்டமானது 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நிலம் வேறு நபர்களின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பின், அவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் கிடையாது.

இந்த பிரச்னையை அந்தந்த மாநில அரசுகள் தேவையான குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி, பயனாளர்களை தேர்வு செய்து, தகுதியான பயனாளர்கள் பட்டியலில் இருந்து நீங்காமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தை கண்காணிப்பதற்காக மத்திய அரசின் குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply