TV

6807407510_87e96e8176_b

திருவனந்தபுரம், 05.02.19:

கேரள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால். இவர் பாஜகவில் இணையப் போவதாக நீண்ட நாட்களாக ஒரு வதந்தி நிலவி வந்ததை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு மோகன் லால் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சசி தரூர் களமிறங்கவுள்ளார். இந்நிலையில் அண்மையில் கேரள மாநில பாஜக தலைவர்
அந்த மாநில பாஜக தலைவர் ஓ,ராஜகோபால் கூறுகையில், திருவனந்தபுரம் தொகுதயில் சசி தரூருக்கு போட்டியாக பாஜக சார்பில் நடிகர் மோகன் லால் போடியிடப் போவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் மோகன் லால் ரசிகர்கள் அவர் அரசியலில் நுழைவதை விரும்பாத அவரது ரசிகர்கள் மோகன்லால் அரசியலில் குதித்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என பகிரங்கமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மோகன் லால் தான் அரசியல் கட்சியில் இணையபோவதும் இல்லை, தனிக்கட்சி தொடங்கப் போவதும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தான் தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் இல்லை எனவும் அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் ஒரு நடிகனாக தன்னுடைய பணியை சிறப்பாக செய்வதாகவும், தனக்கு தன்னுடைய துறை அதிகமான சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் தனக்கு அரசியல் பாடம் சிறிதும் தெரியாது என்றும் மோகன்லால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.