TV

6807407510_87e96e8176_b

இலங்கை மன்னார், 06.02.19:

மக்கள் அனைவரும் இன, மத, பேதம் இன்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி, இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் என 40 நாட்கள் அங்கபிரதட்சணம் மூலம் நல்லிணக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை மன்னார் மாவட்டம் வங்காலை பகுதியைச் சேர்ந்தவர் அன்டன் கிருஷ்ணன் டயஸ் (38). ஆன்மீகம், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற இவர், இலங்கையின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லிணக்க பயணம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கையின் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டதையடுத்து, நேற்று (5ம் தேதி) காலை, ‘இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இன, மத, பேதம் இன்றி ஒற்றுமையாக வாழ வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, மன்னார் தள்ளாடி பகுதியிலிருந்து அனுராதபுரம் வரை அங்கபிரதட்சணம் மூலம் நல்லிணக்க பயணம் மேற்கொண்டார்.

தினமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அங்கபிரதட்சணம் மூலம் செல்ல தீர்மானித்துள்ள இவர், இன்னும் 40 நாட்களில் திருகேதீஸ்வரம், மடு வழியாக அனுராதபுரத்தை சென்றடைந்து, அங்கு தனது நல்லிணக்க பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘இலங்கை மக்கள் அனைவரும் இன, மத, பேதம் இன்றி ஒற்றுமையாக வாழ வேண்டும்’ என்பதற்காக அன்டன் கிருஷ்ணன் டயஸ் மேற்கொண்டுள்ள இந்த அங்கபிரதட்சணம் நல்லிணக்க பயணம் முயற்சிக்கு, ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply