TV

6807407510_87e96e8176_b

வெல்லிங்டன், 06.02.19:

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, இன்று வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டீம் செய்பர்ட் கோலின் முரே தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தது. அணியின் ஸ்கோர் 8.2 ஓவர்களில் 86 ரன்களை கடந்த போது, கோலின் முரே 20 பந்துகளில் 34 (2 பவுண்டரி 2 சிக்சர்) ரன்கள் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 3 சிக்சருடன் 34 ரன்களிலும், மிச்செல் 8 ரன்களிலும், ரோஸ் டெய்லர் 14 பந்துகளில் 2 சிக்சருடன் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் தொடக்க வீரர் டீம் செய்பர்ட் தனது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. சாண்டனர் 7 ரன்களிலும், குக்லின்ஜன் 20 (7 பந்து 3 பவுண்டரி 1 சிக்சர்) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடுன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சரிவை கண்டது. ரோகித் சர்மா 1 ரன்னிலும், சிறிது நேரம் அதிரடியை காட்டிய ஷிகர்தவான் 29 (18 பந்து 2 பவுண்ட)ரன்களிலும், தமிழக வீரர் விஜய் சங்கர் 27 (18 பந்து 2 பவுண்டரி 2 சிக்சர்) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தோனி 39 (31 பந்து 5 பவுண்டரி 1 சிக்சர்) ரன்களிலும், குணால் பாண்டியா 20 ரன்களிலும் அவுட்டாகினர். இதனால் இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதால், நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி வரும் வெள்ளி அன்று (பிப் – 8) நடைபெற உள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.