TV

6807407510_87e96e8176_b

பனாஜி, 07.02.19:

கோவா கடற்கரையை ஒட்டிய பகுதிகள் இளைஞர்களைக் கவரும் வகையில் மதுக் கலாச்சாரத்துக்கு மிகவும் புகழ் பெற்றவை. இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால், கடற்கரைப் பகுதி பெரிதும் மாசுபடுவதாக அந்த மாநில அரசு கருதியுள்ளது. எனவே, சுற்றுலாப் பகுதிகளைச் சுத்தமாகப் பராமாரிக்க திரிஸ்டி மரேன் என்ற அமைப்பும் மாநில சுற்றுலா அமைச்சகமும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன.

அதன்படி, 10 பீர் பாட்டில் மூடிகள் அல்லது 20 புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகளைக் கொடுத்து இலவசமாக பீர் வாங்கிக் கொள்ளலாம். ஜனவரி 30ம் தேதி பாகா கடற்கரை பகுதியில் உள்ள சான்சிபாரில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. பீர் பாட்டில் மூடிகள் மட்டுமல்ல, பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைக் கொடுத்துக்கூட பீர் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் வேஸ்ட் பார்ஸ் என்றழைக்கப்படும் இந்த பார்கள் நிறைய துவங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.