TV

6807407510_87e96e8176_b

சென்னை, 07.02.19:

தமிழ் திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்த்திரையுலகில் உள்ள பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் தமிழ் திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் திரைப்படங்களை வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நிதி பிரச்னைகள் காரணமாக தடைசெய்யப்பட்ட திரைப்படங்களை மீண்டும் தொடங்க உதவி செய்யவும், நடிகர்கள் அவர்கள் முதலில் ஒப்புக் கொண்ட திரைப்படத்தை முடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும், ஒரு தயாரிப்பாளர்கள் முதலாவது பைனான்சியர் ஒப்புதல் இல்லாமல் இன்னொரு பைனான்சியரிடம் கடன் வாங்க முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி ஒரு படம் ரிலீஸ் ஆக இந்த புது சங்கத்திலும் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. திருப்பூர் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின், அன்புச்செழியன், அபிராமி ராமனாதன், ஆர்.பி சவுத்ரி, ராம், இளங்கோவன் உட்பட பலர் ஒருங்கிணைந்து இந்த யூனியனை தொடங்கியுள்ளார்கள்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.