TV

6807407510_87e96e8176_b

ஆக்லாந்து, 08.02.19

நியுசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை சமன் செய்துள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 பொட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் செய்ப்ரெட் முரே ஆகியோர் தலா 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத்தொடர்ந்ர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 20 ரன்களிலும், மிட்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளினேறினர். போட்டியைப் போல அல்லாமல் இந்த போட்டியில் இந்தியப் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் நியுசிலாந்து அணி அதிரடியாக விளையாடாமல் நிதானமாக விளையாடியது.

தொடர்ந்து நியூசிலாந்து அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஸ் டெய்லர், சிராண்ட்ஹோமே ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 42 ரன்களில் ஆவுட் ஆகி வெளியேற கிராண்ட்ஹோம் 28 பந்துகளில் 50 ரன்களில் அவுட் ஆனார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக நியுசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய குருனால் பாண்ட்யா 3 விக்கெட்களும், கலீல் அகமது 2 விக்கெட்களையும், சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதையடுத்து 159 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் தவான் கூட்டணி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. அரைசதம் அடித்த ரோஹித் ஷர்மா 50 ரன்களில் ஆட்டமிழக்க, தவான் 30 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த ரிஷப் பாண்ட் அதிரடியாக விளையாட அவருக்கு உறுதுணையாக விஜய் சங்கரும் உதவினார்,

தொடாந்து விஜய் 14 ரன்களில் அவுட் ஆக அதன் பின் களமிறங்கிய தோனி பண்ட்டோடு ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாட இந்தியா 18.5 ஓவர்களில் 162 ரன்களை சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என சமன் செய்துள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply