TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 09.02.19:

விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் தேனா வங்கிகள் இணைவை அடுத்து, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் பஞ்சாப் & சிந்த் வங்கிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் தேனா வங்கிகள் இணைய அளித்த அனுமதியை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக இணைய உள்ள வங்கிகளுக்கான அனுமதியை வழங்கலாமா என்ற முடிவை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் பஞ்சாப் & சிந்த் வங்கி மூன்றும் இணையும் போது 16.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரு வங்கி நிறுவனமாக இது உருவெடுக்கும். அதே நேரம் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ளும் பாங்க் ஆப் பரோடா, இந்தியாவின் இரண்டாம் மிகப்பெரிய வங்கி நிறுவனம் என்ற பெயரை எடுக்கும்.

வராக்கடன் அதிகரிப்பால் பொதுத்துறை வங்கி நிறுவனங்கள் தேவையான மூலதனம் இல்லாமல் தவித்து வருகின்றன. இதற்கு தீர்வு காணவே மத்திய அரசு இப்படி வங்கிகளை இணைக்கிறது. அது மட்டும் இல்லாமல் வங்கிகளுக்கு மறு மூலதனம் செய்வது குறித்த அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வங்கிகள் இணைவால் ஊழியர்களின் வேலை பறிபோவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply