TV

6807407510_87e96e8176_b

ஹைதராபாத்: 09.02.19:

ஹைதராபாத்தில் உள்ள நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்துகொண்ட பெண்ணின் வயிற்றில், கத்தரிக்கோல் வைத்து தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மங்கலஹாட் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி சவுத்ரி. 32 வயதான இவருக்கு ஹிரனியா நோய் பாதிப்பு இருந்தது. மேலும் மகேஸ்வரி தனக்கு ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி அவருக்கு ஆபரேஷன் செய்துள்ளனர்.

இதனையடுத்து ஆபரேஷன் முடிந்து உடல்நிலை தேறிய பின் வீடு திரும்பிய அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வயிற்று வலிக்கான காரணம் பற்றி அறிய எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றுக்குள் முக்கால் அடி நீளம் கொண்ட கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. ஹிரனியா பாதிப்பை சரி செய்வதற்காக அவருடைய வயிற்றில் ஆபரேஷன் செய்த மருத்துவர்கள், கத்தரிக்கோலை வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டது இதனால் உறுதியானது.

டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான புகழ் பெற்ற இந்த மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சம்பவம் மருத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply