TV

6807407510_87e96e8176_b

சிட்னி, 09.02.19:

2019 ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக, முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள 10 அணிகளும் தங்களை தயார் செய்து வருகிறது. மேலும் ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அணியினரும் தங்களது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை ஐசிசி-க்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு, பயிற்சியாளராக அந்நாட்டு முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும், மூன்று முறை உலக கோப்கையை வென்ற ஜாம்பவானுமான ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த டேவிட் சாகெர் தனது பதவியை ராஜினாமா செய்ததால், பாண்டிங்கிற்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply