TV

6807407510_87e96e8176_b

ஐதராபாத், 09.02.19:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உட்பட பல அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த பல மாதங்களாக மத்திய அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, வரும் திங்கள்கிழமை (11ம் தேதி) தலைநகர் டில்லியில், பிரதமர் மோடிக்கு எதிராக ஒருநாள் போராட்டம் நடத்தப்போவதாக நாயுடு அறிவித்துள்ளார்.

இதற்காக, தென் மத்திய ரயில்வேயிடம் இருந்து 20 பெட்டிகளுடன் கூடிய இரண்டு ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்த ரயில், நாளை (10ம் தேதி) அனந்தபுரம் மற்றும் ஸ்ரீகாகுளம் ஆகிய இடங்களில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் செல்ல தயாராகவுள்ளன.

‘மத்திய அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், அந்த ரயில்களில் டில்லி வரலாம்’ என சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply