TV

6807407510_87e96e8176_b

சென்னை, 10.02.19:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய இரண்டாவது மகள் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, தொழிலதிபர் விசாகன் திருமணம், சென்னையில் நாளை (11ம் தேதி) நடைபெற உள்ளது.

திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழை ரஜினி கொடுத்து வருகிறார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று தன் மகள் திருமண அழைப்பிதழை வழங்கி, திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி முதல்வரிடம் ரஜினி கேட்டுக்கொண்டார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.