TV

6807407510_87e96e8176_b

திருச்செந்தூர், 10.02.19:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாயிற்று. இதனையொட்டி இன்று அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கொடிப்பட்டம் பூஜை செய்யப்பட்டு கோவில் வலம் வந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின்பு காலை 5.00 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மகர லக்கனத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று தொடங்கி திருவிழாவானது வருகின்ற 21.02.19 வரை 12 தினங்கள் நடைபெறுகின்றது. புகழ்மிக்க மாசித்திருவிழாவில் 7 ம் திருநாள் அதிகாலையில் 5.00 – 5.30 க்குள் சண்முகப்பெருமானின் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும்,தொடர்ந்து சுவாமி ஆறுமுக நயினாா் சண்முக விலாசத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளுன்வதும் சிறப்பு.

தொடாந்து தங்க சப்பரத்திவ் சிவப்பு சாத்தியும், வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தியும், பச்சை கடசல் சப்பரத்தில் பச்சை சாத்தி என சிறப்புவாய்ந்த சப்பர பசனி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19ம் தேதியும்,நடைபெறுகிறது. தெப்பத் திருவிழா20ம் தேதியும் நடைபெறுகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.