TV

6807407510_87e96e8176_b

ஹாமில்டன், 10.02.19:

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இறுதிப் போட்டி போல மாறியுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், அடுத்து நடந்த டி20 தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரை 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளன.

இந்நிலையில் தொடரை நிர்ணையிக்கும் 3 வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறி உள்ளது.

ஒருநாள் தொடரை மிக மோசமாக 4-1 என இழந்த நியூசிலாந்து அணி இந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் டி20 தொடரைக் கைப்பற்ற அந்த அணி முயலும். அதே சமயம் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் இதுவரை டி20 தொடரை வென்றதில்லை ஆகவே, அந்த குறையைப் போக்க இந்தியா போராடும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் இந்த டி20 போட்டி நடைபெறும் ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆடுகளத்துக்கு ஏற்ப அணித் தேர்வு செய்ய இந்திய முடிவெடுத்தால் நிச்சயம் அணியில் மாற்றம் இருக்கும்.

அதே சமயம், இந்தியா டி20 தொடரின் முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தாலும், அதே அணியுடன் இரண்டாம் போட்டியை சந்தித்து அதில் வெற்றி பெற்றுள்ளது. இதை அப்படியே தொடர எண்ணினால், அணியில் எந்த மாற்றமும் இருக்காது.

ஆடுகளத்துக்கு ஏற்ற அணியா? புதிய வீரர்களுக்கு வாய்ப்பா? மாற்றமில்லாத அதே அணியா? அணித் தேர்வில் கேப்டன் ரோஹித் மற்றும் அணி நிர்வாகம் எடுக்கப் போகும் முடிவு தான் மூன்றாவது போட்டியில் இந்தியாவின் வெற்றி – தோல்வியை தீர்மானிக்கப் போவதாக இருக்கும்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.