TV

6807407510_87e96e8176_b

கோவை, 11.02.19:

கோவையில் நடைபெற்ற நடனப்பள்ளி ஆண்டு விழாவில் பெண்களை கவுரவிக்கும் விதமான பல்வேறு நடனங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

கோவையில் உள்ள சுரேஷ் இன்ஸ்ட்டியூட் ஆப் நடனப்பள்ளியின் 14 வது ஆண்டு விழா ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. Fisso voit 19 என்ற தலைப்பில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகி அபர்ணா தினகரன் மற்றும் தெற்காசிய அளவில் திருமதி அழகி பட்டம் வென்ற பல் மருத்துவர் திருமதி காயத்ரி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண் களை கவுரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரத நாட்டியம், தமிழக பாரம்பரியத்தை குறிக்கும் நடனங்கள் மற்றும் மேற்கத்திய நடனங்கள் உட்பட பல்வேறு குழுவினர் ஆடிய நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் திரைப்பட காட்சியுடன் தொடர்புபடுத்தி ஆடிய நடனப்பள்ளியின் ஆசிரியர் சுரேஷ் அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அழிந்து கொண்டு வரும் நமது பாரம்பரிய கலைகளை பற்றி இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விதமான நடன நிகழ்ச்சிகள் எங்கள் நடன பள்ளி மூலமாக நடத்தி வருவதாகவும் , தற்போது உடல் ஆரோக்கியம் காண நடனம் என்பது சிறந்த உடற்பயிற்சி என பொதுமக்கள் உணர்ந்து வருவதாக தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply