TV

6807407510_87e96e8176_b

கோவை 11.02.19:

கோவையில் கஞ்சா கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுயுள்ளது.

கோவை புலியகுளம் சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லியோ மார்டின். பிரபல ரவுடியான இவர் மீது, கொலை மற்றும் அடி தடி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அலமேலுமங்கா லேஅவுட் பகுதியில் கத்தி குத்து காயங்களுடன் லியோ மார்டின் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், அப்பகுதியினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே லியோ மார்டின் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரவுடி லியோ மார்டின் மதுபோதையில், புலியகுளம் துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்த தருண் என்ற இன்பிரண்ட்ராஜன், மற்றும் கொண்டசாமி கோவில் வீதியை சேர்ந்த விக்கு என்ற சண்முகம் ஆகியோரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியதாக கூறுப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு பேரும் ரவுடி லியோ மார்டினை கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு தலைமறைவான 2 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவையில் ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.