TV

6807407510_87e96e8176_b

வேலூர்,11.02.19:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்களம் கூட்டுசாலையில் இன்று காலை லத்தேரி காவல் துறையினர் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து ஈச்சர் வேன் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது.

இதனை பார்த்த காவலர்கள் அந்த வாகனங்களை மடக்கி பிடிக்க முயற்சித்தபோது, அந்த வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. இதனைதொடர்ந்து அந்த வாகனத்தை பின்தொடர்ந்த காவலர்கள் மற்ற காவலர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவலர்கள் அதிவேகமாக சென்று அந்த ஈச்சர் வேனை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அதில் ஆந்திரா அரசால் தடை செய்யப்பட்ட 2 செம்மர கட்டைகள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக வேனில் இருந்த இரு நபர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ‌முதல் கட்ட விசாரணையில் வேலூர் மாவட்டம் கலசமங்கலம் முஸ்லிம் காலனி தெருவைச் சேர்ந்த அமானுல்லா என்பவரது வீட்டில் மேலும் எட்டுடன் செம்மர கட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அனைத்து செம்மர கட்டைகளையும் கைப்பற்றிய லத்தேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ பட்டப்பகலில் சொகுசு காரில் செம்மரம் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.