TV

6807407510_87e96e8176_b

தூத்துக்குடி, 11.02.19:

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கி எஸ்பி முரளி ரம்பா பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 போலீசாருக்கு கடந்த 9ம் தேதி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி முரளி ரம்பா தலைமையில் பாராட்டு விழா நடந்தது.

சமீபத்தில், தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லையில் பாலமுருகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடந்த 4 மணி நேரத்தில், தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் குற்றவாளியை கைது செய்தனர்.

அதேபோல், வடபாகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, ஞானராஜன், தலைமைக்காவலர் சண்முகநாதன், காவலர் சொர்ணபாலன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோர், கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து, 28 பவுன் நகையை மீட்டனர்.

அதே போல், சிறப்பாக செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, ராஜசுந்தர், சப்இன்ஸ்பெக்டர்கள் கணபதி, சிவலிங்க பெருமாள், முத்து விஜயன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் நாராயணசாமி, இருதயராஜ், சேகர் உள்ளிட்ட போலீசாரின் சேவையை பாராட்டி, வெகுமதியை எஸ்பி முரளி ரம்பா வழங்கினார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.