TV

6807407510_87e96e8176_b

மதுரை, 12.02.19:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டிக்கு அருகில் உள்ளது சின்னக்கட்டளை கிராமம். இந்த பகுதிகளில் குற்றசம்பவங்கள் அதிகமாக நடப்பதினால், சேடபட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்ஐ மாயன் இரவில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக அடையாளம் தெரியாத இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தபோது, அதில் ஒருவர் தப்பியோடியுள்ளார். தொடர்ந்து அவரை விரட்டி பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, திடீரென தனது போர்வைக்குள் இருந்த கத்திணை எடுத்து எஸ்ஐ
மாயனை கழுத்துக்கீழே குத்தி மீண்டும் விட்டு தப்பிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த எஸ்ஐ மாயனை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசையே கத்தியால் குத்திய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply