TV

6807407510_87e96e8176_b

12.02.19:

சீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்போ லேட்டஸ்டாக ஆப்போ கே 1 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.  இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ16,990. மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன் மற்றொரு போன் சியோமி ரெட்மி நோட் 7 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்:

ஆப்போ கே 1 ஸ்மார்ட்போனில் 6.4-inch FHD+ டிஸ்பிளே பெரிய டிஸ்பிளே, அதன் டாப் பகுதியில் dew-drop notch உடன் வருகிறது. மேலும் இதில் 2340 x 1080 pixels ரெசுலேசன் வழங்குகிறது.  சியோமி ரெட்மி நேட் 7  இதன் ஸ்க்ரீன் 6.3-inch சிறியதாக வருகிறது. மற்றும் 2340 x 1080 pixels ரெசுலேசன் சரியாக ஆப்போ கே 1 போல இருக்கிறது

மேலும் ஆப்போ கே 1 யில் Qualcomm Snapdragon 660 octa-core ப்ரோசெசர் 2.2GHz ஸ்பீட் உடன் வழங்கப்படுகிறது. இதில் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் microSD கார்ட் வழியாக 256GB வரை அதிகரிக்கலாம். சியோமி ரெட்மி நோட் 7 யில் Qualcomm Snapdragon 660 ப்ரோசெசர் 2.2GHz ஸ்பீட் உடன் இருக்கிறது இந்தியாவில் இந்த போன் 3GB/32GB, 4GB/64GB மற்றும் 6GB/64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையுடன் கிடைக்கிறது.

ஆப்போ கே1 யில் 16MP + 2MP பின் கேமரா இருக்கிறது. அதன் செல்பி கேமரா 25MP ப்ரண்ட் சென்சாருடன் வழங்கப்படுகிறது. மறுபக்கத்தில் சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 48MP சென்சாருடன் வருகிறது. மற்றும் இதில் . 5MP டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 13MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply