TV

6807407510_87e96e8176_b

சென்னை, 12.02.19:

சென்னை அருகே வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம், சென்னையில் சில பகுதிகளில் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து 609 கி.மீட்டர் தொலைவில் உள்ள வங்கக் கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உருவானதாக கூறப்படும் நிலையில், மெரிக்க புவியியல் மையம் இதை உறுதி செய்துள்ளது. மேலும் இந்த நில அதிர்வு 4.9 ரிக்டர் அளவில் இருந்துள்ளது. இதனால் எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. அதுபோல் மீண்டும் இன்று காலை 6.55 மணிக்கும் இதுபோல் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னை உள்பட பல இடங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளதால், சென்னை மக்கள் பீதி, அடைந்துள்ளனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply