TV

6807407510_87e96e8176_b

கோவை, 15.02.19:

நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே.படத்தின் டீசர் வெளியானதை அடுத்து கோவையில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அரசியல் படமாக உருவாகியுள்ள என்.ஜி.கே – நந்த கோபால குமரன் படத்தின் டீஸர் நேற்று வெளியானதை தொடர்ந்து, கோவை மாவட்ட சூர்யா நற்பணி மன்ற ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

கோவை மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவர் சுனில் தலைமையில், சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி நடிப்பில் தேவ் படம் வெளியான கோவை கவுண்டம்பாளையம் பகுதியல் உள்ள கல்பனா திரையரங்கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூர்யாவின் என்.ஜி.கே டீஸரும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் அனைவரும் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுமார் ஒன்றரை நிமிடங்கள் இருந்த இந்த டீஸர் சூர்யாவின் மாஸ் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது என கோவை மாவட்ட சூர்யா ரசிகர்கள் தெரிவித்தனர்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply