TV

6807407510_87e96e8176_b

கோவை, 16.02.19:

உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தான விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.இதை தொடர்ந்து கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள பிஎஸ்ஜி மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் பற்றியான தேசிய அளவிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் இதை மேற்கொள்ளும் போதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அரசு மருத்துவ கல்லூரியின் தலைவர் அசோகன் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செயலர் காந்திமதி அவர்கள் உறுப்பு தானத்தை பற்றி சிறப்பு விளக்கங்களை கொடுத்தனர். இந்த கருத்தரங்கில் அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள், அறுவை சிகிச்சை சார்ந்த ஒத்துழைப்பாளர்கள், ஆர்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply