TV

6807407510_87e96e8176_b

விருதுநகர், 16.02.19:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டங்குளத்தைச் சேர்ந்தவர் பாக்கியசெல்வம். இவர் தனது குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து உவரி அந்தோணியார் கோயிலுக்கு இன்று காலை தனது காரில் புறப்பட்டுள்ளார். அப்போது நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வரும்போது, திடீரென கார் எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியசெல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஐந்து பேரும் காரில் இருந்து கீழே இறங்கினர். ஆனால் உடனடியாக பரவிய தீயால் அந்த கார் மளமளவென எரிய துவங்கியது. இதனால் திருநெல்வேலி மதுரை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.