TV

6807407510_87e96e8176_b

கோவை, 16.02.19:

பெண்களின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பேணி காக்கும் வி.எல்.சி.சி. நிறுவனம் தற்போது, பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறது என அந்நிறுவனத்தின் நிறுவனர் வந்தனா லுத்ரா தெரிவித்துள்ளார்.

பிரபல பெண்கள் உடற்பயிற்சி மற்றும் அழகு கலை நிறுவன நிறுவனரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது,தங்களது நிறுவனத்தின் முக்கிய சந்தையாக தமிழகம் திகழ்வதாக குறிப்பிட்டார்.

பெண்களின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பேணி காக்கும் வி.எல்.சி.சி., நிறுவனம் தற்போது, பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருவதாகவும், மகளிருக்கான மத்திய அரசின் சிறப்பு திட்டத்துடன் இணைந்து செயலாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்கள் நிறுவனத்தின் கிளைகள் தமிழகமெங்கும் ஏற்கனவே 11 இடங்களில் உள்ள நிலையில், புதிதாக 5 இடங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் 14 இடங்களில் ஆரோக்கிய மையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply