TV

6807407510_87e96e8176_b

கோவை, 17.02.19:

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

கோவை செட்டிபாளையம் பகுதியில் இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றனர். இன்று காலை 8 மணியளவில் துவங்கிய இப்போட்டிகளை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கு முன்னதாக புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.  மேலும்அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் நடைபெறும் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு எனவும், இது கோவைக்கு பெருமை எனவும், 700 க்கும் மேற்பட்ட காளைகளும், சுமார் 1700 வீரர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்த அவர்,  சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு முதல் பரிசாக கார் வழங்க உள்ளதாகவும், பைக், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளும் வழங்க இரூப்பதாகவும் அவர் கூறினார். இப்போட்டிகளில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் காளைகளும் கலந்து கொண்டன.

வீரர்கள் மற்றும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும் கோவையை சேர்ந்தவர்களை மாடுபிடிக்க அனுமதிக்கவில்லை. அனுபவம் வாய்ந்த தென் மாவட்ட வீரர்களே அதிகளவில் கலந்து கொண்டனர். உற்சாகமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தபாபட்டுள்ளனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.