TV

6807407510_87e96e8176_b

சென்னை, 20.02.19:

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும், மாற்றியமைத்து வருகின்றன. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இன்றி ஒரு லிட்டர் ரூ.73.72 ஆகவும், டீசல் விலையும் மாற்றம் எதுவும் இன்றி, நேற்றைய விலையான  ரூ.69.91-க்கே விற்பனையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.