TV

6807407510_87e96e8176_b

காலபோகோஸ், 23.02.19:

100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட ஆமை இனம் ஒன்றை, சுமார் 113 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் உள்ள காலபோகோஸ் தீவில் 10க்கும் அதிகமான அரிய வகை ஆமை இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில், பெர்னாண்டினா என்று அழைக்கப்படும் ராட்சத ஆமையும் ஒன்று. 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக வாழும் இந்த வகை ஆமைகள் உணவுக்காவும், அதில் இருந்து கிடைக்கும் எண்ணெய்க்காகவும் மனிதர்களால் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. கடைசியாக, 1906ம் ஆண்டுதான் பெர்னாண்டினா ஆமை மனிதர்களின் கண்ணில் தென்பட்டது. அதற்கு பிறகு பெர்னாண்டினா ஆமை எங்கேயும் காணப்படாததால், அந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்பட்டது.

இந்நிலையில், ‘ராட்சத ஆமை மீட்பு மற்றும் மறுசீரமைப்பு’ என்கிற குழுவைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் காலபோகோஸ் தீவில் ஆய்வு பயணம் மேற்கொண்டனர். அப்போது, அந்தத் தீவில் பெர்னாண்டினா இனத்தைச் சேர்ந்த பெண் ஆமை ஒன்று உயிர் வாழ்வதை கண்டுபிடித்தனர். சுமார் 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த அந்த ஆமையை, இனப்பெருக்க மையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த ஆமைக்கு 100 வயதுக்கும் மேல் இருக்கும் என்றும், காலபோகோஸ் தீவில் மேலும் சில பெர்னாண்டினா இன ஆமைகள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.