TV

6807407510_87e96e8176_b

ஸ்பெயின், 25.02.19:

ஸ்பெயின் நாட்டில் கஞ்சா போதையில் பெற்ற தாயை 1000-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி தனது நாய்க்கு உணவாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட்-ஐ சேர்ந்தவர் அல்பர்டோ சன்சேஸ் கோமஸ். 26 வயதான இவர் கஞ்சா போதைக்கு அடிமையாக இருந்த நிலையில், தனது 66 வயது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதம் மேலாக ஆல்பர்ட்டோ கோமசின் தாய் திடீரென மாயமான நிலையில், அவருக்கு தெரிந்தவர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கோம்ஸிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் ஆல்பர்ட்டோ கோமஸ் தனது தாயை கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்திருந்தது தெரியவந்ததை தொடாந்து, ஆல்பர்ட்டோ கோமசை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கஞ்சா வாங்குவதற்கு பணம் தராததால் தாயை கொலை செய்தததும், அவரின் உடல் பாகங்களில் சிலவற்றை தனது செல்லப்பிராணியான நாய்க்கு உணவாக வழங்கியதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோம்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநல பரிசோதனை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.