TV

6807407510_87e96e8176_b

லாஸ் ஏஞ்சல்ஸ், 25.02.19:

91-வது ஆஸ்கர் விருது விழாவில் தமிழர் இயக்கிய ஃபீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ் என்ற ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது ஆஸ்கார் விருது வழங்கும் விழா. இந்நிலையில் 91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த குறும்படத்துக்கான விருது ஃபீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ் என்ற படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக இந்த ஆவண குறும்படம் தயாராகியுள்ளது . ஃபீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ் படத்திற்காக ரேகா செஹ்டாப்சி, மெலிசா பேர்டன் ஆகியோர் பெற்றனர். இந்த படம் கோவையைச்சேர்ந்த முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்க்கான விருது ஃபர்ஸ் மேன் படத்துக்கு வழங்கப்பட்டது. நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்ததை மையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான விருதை ஸ்கின் படம் வென்றது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply