TV

6807407510_87e96e8176_b

தெலுங்கானா, 26.02.19:

தெலுங்கானாவில் திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதிலாக கோழிக்கறி பறிமாறியதால் மணமகன் உறவினருக்களுக்கும் மணமகள் உறவினருக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் பூர்கம்பாடு மண்டலம் உப்புசாகு கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன். இவருக்கும் அஜ்மீரா என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருதரப்பு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தியதை தொடர்ந்து, திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு விருந்து உணவு பரிமாறப்பட்டது. அப்போது மணமகன் தரப்பு உறவினர்கள் சிலர் மது அருந்தி இருந்த நிலையில், திருமண விருந்தில் ஆட்டுக்கறி ஏன் பரிமாறவில்லை என மணமகள் வீட்டாரிடம் கேட்டு வாக்கு வாதம் செய்தனர்.

அதற்கு பதிலளித்த மணமகள் வீட்டினர் ஆட்டுக்கறி வாங்க போதிய பணம் இல்லாததால் அதற்கு பதிலாக கோழிக்கறி விருந்து வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருடன் தீவிர வாக்கு வாக்குவாததில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறியதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கைகலப்பு ஏற்பட்டது. உணவு பரிமாறுவதற்காக போடப்பட்டிருந்த பந்தலில் கட்டைகளை பிடுங்கியும், நாற்காலிகளை தரையில் வீசியும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

இதில் இரு தரப்பு உறவினர்களும் காயமடைந்த நிலையில், புர்கம்பாடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களை புர்கம்பாடு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கின்றனர். திருமணம் வரை அனைவரும் சந்தோஷமாக மணமக்களை வாழ்த்திய நிலையில், ஒரு சிலர் செய்த தவறால் மகிழ்ச்சியாக நடந்த திருமண விழா கலவரமாக மாறியது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply