TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 01.03.19:

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதை தொடாந்து சென்னையில் அவர் வீடு உள்ள பகுதியில் மக்கள் உற்சாகமாகவும், இனிப்பு வழங்கியும் அபிநந்தன் விடுதலையாவதை கொண்டாடிய மக்கள்  விடுதலை செய்தி மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஜஸ்தானிலிருந்து விடுதலையாகும் சூழலில் அபிநந்தனை வரவேற்க அவரது தந்தை சிம்மக்குட்டி வர்தமான் டெல்லி புறப்பட்டுள. மேலும் அவர் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் அபிநந்தன் வீடு இருக்கும் பகுதியில் பல அரசியல் கட்சி தலைவர்கள், காவல் படை அதிகாரிகள் அபிநந்தனின் தந்தயை வீட்டில் சந்தித்து உரையாடினர்.

நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்தார். இம்ரான் கானின் இந்த அறிவிப்பை தொடாந்து, நேற்று மாலை பத்தரிகையாளர்களை சந்தித்த இந்திய முப்படை தளபதிகள் வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானி அபிநந்தனை அமைதி நிமித்தம் காரணமாக விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதை தவிர்த்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply