TV

6807407510_87e96e8176_b

ஹைதராபாத், 01.03.19:

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் மணமக்களை பொக்லைன் எந்திரத்தில் ஊர்வலமாக உறவினர்கள் அழைத்துச் சென்றது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

மணமக்களை, திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி, மாட்டு வண்டி, கார், டிராக்டர் ஆகியவற்றில் அமர செய்து திருமண மண்டபம் வரை மூலமாக அழைத்து செல்வதை பார்த்து இருக்கிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு முன் ஆடி, பாடி செல்வது வழக்கம்.

ஆனால் தெலங்கானா மாநிலத்தில் அந்த மாநில மக்களுக்கே உரிய சம்பிரதாயத்திற்கு அடிப்பீடமாக திகழும் கம்மம் நகரில் நேற்று பாரம்பரிய முறைக்கு மாறான திருமண ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. மிக சிறப்பான முறையில் பலூன்கள், மின்சார சரவிளக்குகள், மலர் தட்டிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட பொக்லைன் இயந்திரம் ஒன்றை முன்பக்கத்தில் மணமக்களை அமர வைத்த உறவினர்கள் திருமண மண்டபம் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

புதுமையான முறையில் நடைபெற்ற இந்த திருமண ஊர்வலத்தை கம்பம் நகர மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.