TV

6807407510_87e96e8176_b

சென்னை, 02.03.19:

‘பேட்ட’ திரைப்படத்தின் 50வது நாளை, படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பேட்ட’. இந்த படத்தில் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், த்ரிஷா உட்பட பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த வெற்றியை, ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். அத்துடன், படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினருடன் சேர்ந்து நடிகர் ரஜினியும் இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் தனுஷ், பாபி சிம்ஹா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply