TV

6807407510_87e96e8176_b

வாஷிங்டன், 02.03.19:

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டை அமெரிக்கா, சீனா வரவேற்றுள்ளன.

கடந்த பிப். 27-ம் தேதி பாக்.ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று (மார்ச்-1) விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

இந்திய விமானியை விடுவித்த பாக். முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில், பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் வலியுறுத்துகிறோம் என்றார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

இந்தியா-பாக் இரு நாடுகளும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும், பதற்றத்தை தணிக்க வேண்டும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே சீனா வலியுறுத்தி வருகிறது. இந்த நேரத்தில், பாகிஸ்தான் மேற்கொண்ட நல்லெண்ண நடவடிக்கையை வரவேற்கிறோம் என்றார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.