TV

6807407510_87e96e8176_b

சென்னை, 04.03.19:

கடந்த மார்ச் 1 ம் தேதி நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் தடம். இயக்குநர் மகழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அருண்விஜய்யின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குற்றம் 23 படத்திற்கு பிறகு  அருண் விஜய் இந்த படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தொடாந்து இதுபற்றி கூறிய அருண் விஜய் “இந்த கதையை இயக்குனர் கோபிநாத் என்னிடம் சொன்னபோது, அது பல அற்புதமான திருப்பங்களை கொண்டிருந்தது. இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை பற்றிய கதை இது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply