TV

6807407510_87e96e8176_b

சீனா, 04.03.19:

2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள்  சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2010 மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டது. இதனால் பெரும் விமர்ச்னங்கள் உருவானதை தொடர்ந்து, மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஓசிஏ பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், கிரிக்கெட் போட்டிகள் சீனாவின் ஹாங்ஜூ நகரில் நடத்தப்படும் எனவும், இந்த போட்டிகள் டி 20 போட்டிகளாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி கலந்து கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிசிசிஐ அமைப்பு இந்திய கிரிக்கெட் அணியை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பும் பயணத்திட்டத்தை வைத்திருப்பதால், இது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஓசிஏ தலைவர் ஷேக் அகமது அல் பஹத் அல் சபாப் கூறுகையில் ‘ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அனுப்பாதது வேதனையாகும். இந்தப் பதவியில் இருப்பவர்கள் விளையாட்டை பிரபிலப்படுத்த விருப்பமில்லை, பணம் சம்பாதிக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் சந்தையையும், விளையாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்’ எனக் காட்டமாக விமர்சித்துள்ளனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply