TV

6807407510_87e96e8176_b

கோவை, 05.03.19:

அரசியலில் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்களை திரைப்படங்களாக எடுக்கலாம் என்பதால், தனக்கு அரசியல் பிடிக்குமென பிரபல திரைப்பட நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள லங்கைன்ஸ் என்ற கடிகார விற்பனை நிலையத்தில், குவார்ட்ஸ் என்ற புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கடிகாரத்தை பிரபல திரைப்பட நடிகர் ராணா அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயக்குநர் பிரபு சாலமான் இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருவதாகவும், தமிழில் காடு என்ற பெயரில் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நல்ல மாநில மொழிப்படங்களுக்கு நாடு முழுவதும் வரவேற்பு இருப்பதாகவும், இது சினிமாவிற்கு நல்ல நேரம் எனவும் அவர் தெரித்தார். ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் குறித்த திரைப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது எனவும், மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் ஆர்யா திருமணத்திற்கு வாழ்த்து கூறிய ராணா, தனக்கு தற்போதைக்கு திருமணம் இல்லை என கூறியுள்ளார். மேலும் அரசியலில் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்களை திரைப்படங்களாக எடுக்கலாம் என்பதால், தனக்கு அரசியல் பிடிக்குமெனவும், தற்போது அடுத்த படங்கள் குறித்து மட்டுமே நினைப்பதாகவும் கூறிய அவர், நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட ஆர்வம் என தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply