TV

6807407510_87e96e8176_b

இலங்கை, 05.03.19:

இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தகயா ஸ்தூபி ஒன்றின் திறப்பு விழாவின்போது, மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பி அசோக்குமார், இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவால் கௌரவிக்கப்பட்டார்.

இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில், மாநிலத் தலைநகரான பாட்னாவில் இருந்து 96 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, புத்தகயா மகாபோதி கோயில். இது, உலகெங்கும் உள்ள புத்த சமயத்தவர்களின் புனித யாத்திரைக்கான இடமாக விளங்குகிறது. அத்துடன் இது, ‘யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்’ என 2002ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் மகாபோதி கோயிலின் அமைப்பைக் கொண்டதாக, புத்தகயா ஸ்தூபி ஒன்று இலங்கை கண்டி பேராதனை சுபோதாராம மஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவின்போது, ஸ்தூபியை நிர்மாணித்த தலைமை சிற்பியான மாமல்லபுரம் ஸ்தபதி அசோக்குமார் மற்றும் உதவி சிற்பிகளுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில், கண்டி உதவி இந்தியத் தூதுவர் திரேந்திர சிங், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்கா, சமூக சேவகரும் சுழற்பந்து வீச்சாளருமான முரளீதரன் தந்தை முத்தையா, முருகாமலை முருகன் கோயில் நிர்வாக சபை உறுப்பினர் செல்லையா உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply