TV

6807407510_87e96e8176_b

நாக்பூர், 05.03.19:

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், தமிழக வீரர் விஜய் ஷங்கரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 116 ரன்களும், விஜய்ஷங்கர் 46 ரன்களும், தவான், ஜடேஜா தலா 21 ரன்களும் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஸாம்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின்பின்ச்(37) கவாஜா(38) நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்தவர்களில் ஹேண்ட்ஸ்கோம்ப்48 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு நல்ல அடித்தளம் கொடுத்தார். ஆனால், இறுதியில் இந்திய அணி அபாரமாக பந்து வீசியதால் ஆஸ்திரேலிய அணி மளமளவென விக்கெட்டுகளை சரித்தது. முக்கியமாக குல்தீப் யாதவ்3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனால், ஆஸ்திரேலியாவின் ஸ்டோய்னிஸ் கடைசி வரை நின்று, இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இக்கட்டான சூழ்நிலையில் அரைசதம்அடித்து கலக்கினார் ஸ்டோய்னிஸ், கடைசி ஓவரில் விஜய் ஷங்கர் பந்தில் அவர் அவுட்டானார். அபாரமாக பந்துவீசி, கடைசி ஓவரில்2 விக்கெட்களை வீழ்த்தியதை தொடாந்து ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.