TV

6807407510_87e96e8176_b

நாக்பூர், 0503.19:

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-0 என கைப்பற்றி சாதனை படைத்தது. இதனையடுத்து தொடங்கிய 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனை தொடர்ந்து 2 வது ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதா னத்தில் இன்று நடைபெறுகிறது.  உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இன்றைய ஆட்டத்தையும் சேர்த்து இந்திய அணிக்கு இன்னும் 4 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களே உள்ளன. இதனால் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை இறுதி செய்வதற்கு இந்த ஆட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 2 வது வெற்றியை பதிவு செய்யவும், முதல் போட்டியில் தோற்ற ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்யவும் களமிறங்குவதால் இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply