TV

6807407510_87e96e8176_b

வயநாடு, 07.03.19:

கேரள வனப்பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கேரள எல்லைப் பகுதியான வயநாடு மாவட்டம் லக்கிடி பகுதியில்  4 மாவோயிஸ்ட்டுகள் கல்பட்டா- பைத்திரி, லக்கிடி பகுதியிலுள்ள உபவன் ரிசார்ட்டில் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு 10 மணியளவில், கேரளா தண்டர் போல்ட் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது போலீசார் வருவதை அறிந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இதனால் இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை போலீசாருக்கும் மாவோயிஸ்ட்க்கும் இடையே  துப்பாக்கி சூடு நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டின் போது மலப்புரத்தைச்சேர்ந்த மாவோயிஸ்ட் ஜலீல் இறந்துள்ளதாகவும், மேலும் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு மாவோயிஸ்ட் காட்டிற்குள் சென்று விட்டதாகவும், இரண்டு போலீசாரும் படுகாயம் அடைந்துள்ளதாக காவல் துறை வட்டாரம் தெரிவித்தனர். இந்நிலையில் இறந்த மாவோயிஸ்ட் ஜலீல் உடல் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக, கேரளா போலீசார் தகவல் தெரிவித்தனர். கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளுடன், நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக தமிழக, கேரளா, எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் வனப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த துப்பாக்கிகசூட்டில் காயமடைந்த ஒரு மாவோயிஸ்ட்க்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு வரலாம் என்பதால், அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது கண்ணூர் ஐஜி தலைமையில் வயநாடு எஸ்.பி அலுவலகத்தில் இந்த என்கவுண்டர் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.