TV

6807407510_87e96e8176_b

08.03.19:

கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது ஜிமெயில் செயலியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது இன்பாக்ஸ் அம்சத்தில் சில புதிய வசதிகள் இடம்பெற்றிருக்கிறது.

இதில் புதிய தோற்றம் மட்டுமின்றி ஜிமெயிலில் ஸ்மார்ட் ரிப்ளை வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய வசதியில் மின்னஞ்சல்களுக்கு வேகமாக பதில் அளிக்க மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 2018 டெவலப்பர் நிகழ்வில் கூகுள் ஸ்மார்ட் கம்போஸ் வசதியை அறிமுகம் செய்தது. மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் மின்னஞசல்களை டைப் செய்யும் போது பொருத்தமான வார்த்தைகளை பரிந்துரைக்கும் இதன் மூலம் மிகவேகமாக மின்னஞ்சல்களை எழுத முடியும்.

இதுவரை கூகுளின் புதிய ஸ்மார்ட்போன்களான பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் ஸ்மார்ட் கம்போஸ் வசதி பிரத்யேக அம்சமாக வழங்கப்பட்டிருந்தது. மேலும் ஜிமெயில் வெப் தளத்தில் வழங்கப்பட்டதும், ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது இந்த அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சம் தானாக வழங்கப்படவில்லை. அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில் செயலியை வைத்திருப்போர் ஸ்மார்ட் கம்போஸ் பட்டனை ஜிமெயில் கணக்கில் செயல்படுத்தலாம்.

இதை செய்ய ஜிமெயில் ஆப் சென்று மெனுவில் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி அக்கவுண்ட்களில் ஒன்றை க்ளிக் செய்து ஸ்மார்ட் கம்போஸ் வசதியை செயல்படுத்தவும். இதைத் தொடர்ந்து மின்னஞ்சல்களை டைப் செய்யும் போது ஸ்மார்ட் பரிந்துரைகளை பார்க்க முடியும்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply