TV

6807407510_87e96e8176_b

ராஞ்சி, 08.03.19:

இந்திய-ஆஸ்திரேலிய  அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பில் உள்ளது இந்திய அணி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 0  என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து தொடங்கிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது போட்டியில் 8 ரன்னிலும் வெற்றி பெற்ற  இந்திய அணி தொடரில்  2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (8-ந்தேதி) நடக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் பேட்டிங்கிலும் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது‌ ஷமி ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். தமிழக வீரர் விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்படுகிறார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இந்திய அணி திகழ்கிறது.

ஆஸ்திரேலிய அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இதனால் அந்த அணி வீரர்கள் அனைவரும் கடுமையாக போராடுவார்கள. ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.