TV

6807407510_87e96e8176_b

மும்பை, 09.03.19:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் இருந்து அந்திய விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை 2 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனையடுத்து தொடங்கிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. தோனியின் சொந்த ஊரில் நடந்த இந்த போட்டியை காண அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் தோனி சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தார். இதில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ராயுடு, தோனி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொதப்ப ஆஸ்திரேலிய அனி 32 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் மே மாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூலை வரை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியும் அதற்கான வேலைகளில் ஈடுபட உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஒரு நாள் போட்டிகளில் தோனி பங்கேற்கமாட்டார் எனவும், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிரடியாக அறிவித்துள்ளது. இதனை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 4 மற்றும் 5வது ஒருநாள் போட்டி இம்மாதம் 10 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெற உள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply