TV

6807407510_87e96e8176_b

மொஹாலி, 10.03.19:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ராயுடுவுக்கு பதில் ராகுல், தோனிக்கு பதிலாக பாண்ட், ஜடேஜாவுக்கு பதிலாக சாஹல், ஷமிக்கு பதிலாக புவனேஷ்வர் என நான்கு அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது.

தொடாந்து டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ரோஹித் – தவான் இருவருமே தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர்.  தொடர்ந்து சொதப்பி வந்த தவான், இந்த போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். இதனால் தவான் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சை அடித்து ஆடினார். ஆனால் மறுமுனையில் ரோஹித் சர்மா வழக்கமாக தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும் களத்தில் நிலைத்த பின்னர் அடித்து ஆடினார்.

இருவரும் இணைந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இவர்களை பிரிக்க, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளாள் திணறினர். தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக அரைசதம் கடந்து அசத்தினர். தொடர்ந்து அதிராடியாக ஆடிய ரோகித் சர்மா 92 பந்துகளில் 95 ரன்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்து 5 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ஆனால் தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை பூர்த்தி செய்தார்.

ரோஹித்தை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் தவானுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். சதமடித்ததை தொடர்ந்து அதிரடியாக ஆடிய தவான் 115 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து சற்று நிதானமாக ஆடிய ராகுல் 31 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடாந்து களமிறங்கிய 24 பந்துகளில் 36 ரன்களும், ஜாதவ் 12 பந்துகளில் 10 ரன்களும், விஜய் சங்கர் 15 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிர்னையிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. கடைசி விக்கெட்டாக களமிறங்கிய பும்ரா ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அமக்களப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், ரிச்சர்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.