TV

6807407510_87e96e8176_b

டெல்லி, 12.03.19:

மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா? அல்லது கோட்சேவின் இந்தியாவின் வேண்டுமா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கடுமையான பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூயுகையில் உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேவின் இந்தியா வேண்டுமா என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஒரு கையில் அன்பும், சகோதரத்துவமும் மற்றொரு கையில் வெறுப்பும் அச்சமும் உள்ளது. காந்தி பயமில்லாதவர். ஆண்டுக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் ஆங்கிலேயர்களுடன் அன்பையே பாராட்டினார். ஆனால் சவார்கரோ தன்னை மன்னித்து விடுங்கள் என கடிதம் எழுதியவர்.

மேக் இன் இந்தியா திட்டத்தை பற்றி அருமையாக பேசி வரும் பிரதமர் மோடி, அவரது சட்டை, கோட், ஷூ, செல்போன் ஆகியவை மேட் இன் சீனாவாக வைத்துள்ளார். மசூர் அஸாரை  காங்கிரஸ் விடுவிக்கவில்லை, அதை செய்தது பாஜகவினர் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஏற்கெனவே பாஜக ஆட்சியில் பிடிபட்டிருந்தார். ஆனால் ஒரு விமானத்தை கடத்தி, மசூத் அஸாரை விடுவிக்கும் படி தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். பயணிகளின் பாதுகாப்பை கருதி, அவர்களது குடும்பத்தினரை விட்டு பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்த வைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். இதனாலேயே மசூத் அஸாரை விடுவிக்க நேர்ந்தது என பாஜக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply